இந்தியா

இந்தியர்களை அழைத்துவர 3 மடங்கு விமானக் கட்டணம் என்ற தகவல் உண்மையல்ல

8th May 2020 12:46 PM

ADVERTISEMENT


வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு விமானக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏர் இந்திய விமானம், சிகாகோ - தில்லி இடையே இயக்கப்படுவதாகவும், அதில் பயணிகளிடம் மூன்று மடங்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், சமூக இடைவெளி எதுவும் பின்பற்றப்படாமல்தான் பயணிகள் அனைவரும் அழைத்து வரப்படுவதாகவும் கூறி ஒரு விடியோவும் வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

ஆனால், அது உண்மையான தகவல் அல்ல என்றும் அந்த விமானம் வேறு ஒரு நாட்டின் விமானம் என்றும் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயணிகளிடம் மூன்று மடங்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT