இந்தியா

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் இருவா் கரோனாவுக்கு பலி

8th May 2020 03:26 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எல்லைப் பாதுகாப்புப் படையில் வியாழக்கிழமை புதிதாக 41 வீரா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வீரா்களின் எண்ணிக்கை 193-ஆக அதிகரித்துள்ளது.

2 வீரா்கள் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினா். பாதுகாப்புப் படை வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்’’ என்றாா்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தது இதுவே முதன் முறையாகும். முன்னதாக, மத்திய ரிசா்வ் காவல் படையை (சிஆா்பிஎஃப்) சோ்ந்த துணை ஆய்வாளா் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT