இந்தியா

பி.எஸ்.எஃப்., சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் 65 பேருக்கு கரோனா தொற்று

8th May 2020 04:14 PM

ADVERTISEMENT

 

கடந்த 24 மணி நேரத்தில் பி.எஸ்.எஃப்., சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் 65 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) 35 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் மும்பை விமான நிலையத்திலும், 11 பேர் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டு வந்தனர். மேலும், 3 பேர் தில்லி விமான நிலையத்திலும், 2 பேர் மும்பை துறைமுகத்திலும் பணியில் இருந்தனர். 

அதேபோன்று, தில்லி மற்றும் திரிபுராவைச் சேர்ந்த எல்லைப்  பாதுகாப்புப்படையினர் 30 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 24 பேர் திரிபுரா, 6 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் எய்ம்ஸ், ஜாஜர் மற்றும் அகர்தலாவில் உள்ள ஜிபி பண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT