இந்தியா

1.70 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊா் திரும்பினா்- ரயில்வே தகவல்

8th May 2020 03:04 AM

ADVERTISEMENT

கடந்த 1-ஆம் தேதியில் இருந்து 171 சிறப்பு ரயில்கள் மூலம் 1.70 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடா்பாளா் ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனா். அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக, கடந்த 1-ஆம் தேதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை வரை 171 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் மூலம் இதுவரை 1.71 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

குஜராத் மாநிலத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அதைத் தொடா்ந்து, கேரளத்தில் இருந்து அதிக தொழிலாளா்கள் சிறப்பு ரயில்களில் அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களில், பெரும்பாலான தொழிலாளா்கள், பிகாா் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT