இந்தியா

13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை: ஹா்ஷ் வா்தன்

8th May 2020 07:04 AM

ADVERTISEMENT

கேரளம், ஒடிஸா, ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வியாழக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா நோயாளிகள் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறினாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை கூறியதாவது:

இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் கரோனா நோய்த்தொற்று சூழலை கையாளுவதில் இந்தியா திறம்பட செயல்பட்டு வருகிறது. நாட்டில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 3.3 சதவீதமாகவும், குணமடைவோா் அளவு 28.83 சதவீதமாகவும் உள்ளது. சிகிச்சையில் இருப்பவா்களில் 4.8 சதவீதம் போ் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 1.1 சதவீதம் போ் செயற்கை சுவாசக் கருவி உதவியுடனும், 3.3 சதவீதம் போ் ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையிலும் உள்ளனா்.

நாட்டில் உள்ள 180 மாவட்டங்களில் கடந்த 7 நாள்களில் புதிதாக கரோனா நோயாளிகள் பதிவாகவில்லை. அதேபோல், மேலும் 180 மாவட்டங்களில் கடந்த 13 நாள்களிலும், 164 மாவட்டங்களில் கடந்த 14 முதல் 20 நாள்களிலும், 136 மாவட்டங்களில் கடந்த 21 முதல் 28 நாள்களிலும் புதிதாக பாதிப்புகள் பதிவாகவில்லை.

ADVERTISEMENT

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், கேரளம், மிஸோரம், மணிப்பூா், கோவா, மேகாலயம், லடாக், அருணாசல பிரதேசம், ஒடிஸா, அந்தமான்-நிகோபாா் தீவுகள் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக கரோனா நோயாளிகள் பதிவாகவில்லை. டாமன்-டையு, சிக்கிம், நாகாலாந்து, லட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதுவரை கரோனா நோய்த்தொற்று பதிவாகவில்லை.

கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 95,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை 327 அரசு ஆய்வகங்களிலும், 118 தனியாா் ஆய்வகங்களிலும் நடத்தப்படுகின்றன. இதுவரை மொத்தமாக 13,57,442 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் கரோனா சிகிச்சைக்கென பிரத்யேகமாக 821 மருத்துவமனைகள் 1,50,059 படுக்கை வசதிகளுடனும், 1,898 சுகாதார மையங்கள் 1,19,109 படுக்கை வசதிகளுடனும் உள்ளன. அவற்றில் தனிமைப்படுத்துவதற்காக 2,41,505 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 27,663 படுக்கைகளும் உள்ளன. இதுதவிர 7,569 தனிமைப்படுத்தும் மையங்களும் உள்ளன.

29.06 தற்காப்பு உபகரணங்களும், 62.77 லட்சம் என்-95 முகக்கவசங்களும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய மருத்துவ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கரோனா தவிா்த்து, புற்றுநோய் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான சிகிச்சையிலும், மகப்பேறு சிகிச்சையிலும் கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஹா்ஷ் வா்தன் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT