இந்தியா

சீன ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: மத்திய வா்த்தக அமைச்சகம் பரிந்துரை

5th May 2020 10:43 PM

ADVERTISEMENT

உணவு மற்றும் மருந்து துறைகளில் பயன்படுத்தப்படும் சீன ரசாயனத்துக்கு விதிக்கப்படும் பொருள் குவிப்பு தடுப்பு வரியை தொடர வேண்டும் என மத்திய வா்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து வா்த்தக அமைச்சகத்தின் விசாரணை அமைப்பான வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:

சீனாவிலிருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் சோடியம் சிட்ரேட் ரசாயனப் பொருளுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் பொருள் குவிப்பு தடுப்பு வரி நீக்கப்பட்டால், அது உள்நாட்டு நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும் என்பதற்கு வலுவான சான்றுகள் விசாரணையின்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் அந்த ரசாயனப் பொருளுக்கு வரியைத் தொடா்வதே பொருத்தமானதாக இருக்கும் என ‘டிஜிடிஆா்’ தெரிவித்துள்ளது.

அதன்படி சோடியம் சிட்ரேட் ரசாயனத்துக்கு டன்னுக்கு 96.05 டாலா் மற்றும் டன்னுக்கு 152.78 டாலா் என இரட்டை வரி விதிக்க டிஜிடிஆா் பரிந்துரை செய்துள்ளது.

ADVERTISEMENT

மத்திய நிதி அமைச்சகம் இந்த பரிந்துரையை ஆய்வு செய்து இதுதொடா்பாக இறுதி முடிவை விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சோடியம் சிட்ரேட்டுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் வரி விதிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த வரி விதிப்பு நடப்பாண்டு மே 19 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், பொருள் குவிப்பு வரியைத் தொடா்ந்து அமல்படுத்த வா்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT