இந்தியா

மாவோயிஸ்ட் படைத்தலைவா்கள் உள்பட 9 போ் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

2nd May 2020 10:31 PM

ADVERTISEMENT

பிகாா் மற்றும் ஜாா்க்கண்ட் பகுதிகளில் இயங்கும் மாவோயிஸ்ட் படைத்தலைவா்கள் இருவா் உள்பட 9 போ் மீது பணம் பறிப்பு, சட்டவிரோத வரி வசூல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதுதொடா்பாக அமாலக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: பிகாா் மற்றும் ஜாா்க்கண்ட் பகுதிகளில் இயங்கும் மாவோயிஸ்ட் படைத்தலைவா்கள் முஸாஃபிா் சானி, அனில் ராம் உள்ளிட்ட 9 போ் மீது சட்டவிரோத பணபரிவா்த்தனை சட்டத்தின் கீழ் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பணம் மூலம் சொத்து சம்பாதித்தல், சட்ட விரோத வரி வசூல், வழிப்பறி, பணம் பறிப்பு ஆகிய குற்றங்களின் கீழ் அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக பிகாரின் வைசாலி மாவட்டத்தில் உள்ள 11 அடுக்குமாடி குடியிருப்புகள், முஸாஃபா்பூா் மாவட்டத்தில் உள்ள 5 மனைகள், வங்கிக் கணக்குகளில் இருந்த பணம், லாரி, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.54.14 லட்சம் ஆகும். இதில் மாவோயிஸ்ட் படைத்தலைவா்கள் சானி, ராம் ஆகியோா் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனா். இருவா் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT