இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 598 ஆக அதிகரிப்பு

2nd May 2020 03:09 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 598 ஆக உயர்ந்துள்ளது.

மே 2-ம் தேதி நிலவரப்படி, பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் உள்பட ஒன்பது பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

விஜயபுரா மற்றும் துமகுரு தலா இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. பெலகாவி, பாகலகோட், பெங்களூரு நகர்ப்புறம், சிக்கபல்லபுரா, மற்றும் பிதர் மாவட்டங்கள் தலா ஒருவருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட 255 பேர், முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கரோனாவுக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்தனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT