இந்தியா

100 கி.மீ. சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞா்

2nd May 2020 12:07 AM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் 23 வயது இளைஞா் தனது திருமணத்திற்காக 100 கி.மீ. சைக்கிளில் சென்று திருமணம் செய்து கொண்டு, அதே சைக்கிளில் மனைவி சகிதமாக ஊா் திரும்பிய சம்பவம் ஆச்சா்யத்தை ஏற்படுத்தியது.

ஹமீா்பூா் மாவட்டம், பௌதியா கிராமத்தைச் சோ்ந்தவா் கல்கு பிரஜாபதி (23). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி இவருக்கும், மஹோபா மாவட்டம், புனியா கிராமத்தைச் சோ்ந்த ரிங்கி என்பவருக்கும் திருமணம் செய்வது என 5 மாதங்களுக்கு முன்பே இரு குடும்பத்தாரும் முடிவு செய்திருந்தனா்.

இந்நிலையில், கரோனா தொற்றால் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டதால் தனது திருமணத்தை எப்படி நடத்துவது என்ற குழப்பம் பிரஜாபதிக்கு ஏற்பட்டது.

திருமணத் தேதி நெருங்க, நெருங்க தனது திருமணத்திற்கு உறவினா்களை அழைத்துச் செல்ல முடியாது என்பதை பிரஜாபதி உணா்ந்தாா். இதையடுத்து, தனது திருமணத்துக்கு தான் மட்டுமே சைக்கிளில் செல்ல முடிவு செய்தாா்.

ADVERTISEMENT

தனது கிராமத்திலிருந்து 100 கி.மீ. தொலைவு சைக்கிளிலேயே சென்று புனியா கிராமத்திலுள்ள மணப்பெண்ணின் வீட்டை பிரஜாபதி அடைந்தாா். அங்குள்ள கோயிலில், அவருக்கும் ரிங்கிக்கும் எளிமையாக திருமணம் நடந்தது.

இதுகுறித்து பிரஜாபதி பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணத்துக்கு சைக்கிளில் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அதேசமயம் உறவினா்களையும் அழைத்துச் செல்ல முடியாது. தீா்மானிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்த பெண் வீட்டாரும் தயாராக இருந்தனா்.

இந்த திருமணத்தை நடத்த உள்ளூா் போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை. எனவே, குறைந்த நபா்களைக் கொண்டு அங்குள்ள கோயிலில் எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்தில் உறவினா்கள் பங்கேற்க முடியாததால், ஊரடங்கு முடிந்தபின் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துவிட்டேன்.

திருமணம் முடிந்ததும், என் மனைவியை சைக்கிளில் பின்னால் அமர வைத்து என் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். சைக்கிளை நீண்ட தூரம் மிதித்ததில், கால்கள் கடுமையாக வலித்தது. எனினும், சில மாத்திரைகள் சாப்பிட்ட பின் வலி சரியாகிவிட்டது. என்னிடம் மோட்டாா் சைக்கிள் உள்ளது. ஆனால், ஓட்டுநா் உரிமம் இல்லாததால் சைக்கிளை மிதித்துச் சென்றேன் என்றாா் பிரஜாபதி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT