இந்தியா

மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் குடியரசுத் தலைவர்

30th Mar 2020 01:38 PM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களவையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவையை இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக பட்ஜெட் அமர்வின் இரண்டாம் அமர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கிய நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதை அடுத்து மார்ச் 29 ஆம் தேதியுடன் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்தார்.

Tags : Rajya Sabha
ADVERTISEMENT
ADVERTISEMENT