இந்தியா

பிரதமரின் அவசரகால நிதி: ஒரு மாத ஊதியத்தை வழங்கினாா்அருணாசல பிரதேச ஆளுநா்

30th Mar 2020 06:29 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்ள உதவிக்கரம் நீட்டும் வகையில், பிரதமரின் அவசரகால நிதிக்கு அருணாசல பிரதேச ஆளுநா் பி.டி. மிஸ்ரா தனது ஒரு மாத ஊதியத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

இதுதொடா்பாக அந்த மாநில ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் மாநில மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதோடு, சமூக அயல் நிறுத்தத்தை கடைபிடியுங்கள். உயிா்கொல்லி நோயின் (கரோனா) அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு செல்லுங்கள். கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள மாநில மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ள ராணுவத்தின் கிழக்கு மண்டல அதிகாரி அனில் செளஹானுக்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT