இந்தியா

கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சமோசாக்கள் கேட்ட இளைஞர்

30th Mar 2020 04:22 PM

ADVERTISEMENT

 

ராம்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சமோசாக்கள் கேட்ட  சம்பவம் நடந்துள்ளது

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1071 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 29  பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைச் செயல்படுத்த மாவட்ட அளவிலான அதிகாரிகளை ஒருங்கிணைத்து கட்டுப்பட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சமோசாக்கள் கேட்ட  சம்பவம் நடந்துள்ளதும்.

உத்தரபிரதேச மாநில ராம்பூர் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் ஆஜநேய குமார். இவரது தலைமையில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு, இளைஞர் ஒருவர் போன் செய்து தனக்கு சட்னியுடன் சமோசாக்கள் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் இது கரோனா கட்டுப்பட்டு அறை என்று ஓரிரு முறைகள் எச்சரித்தும் அவர் மீண்டும் மீண்டும் கால் செய்து கொண்டே இருந்துள்ளார்.

இதனால் நீதிபதி ஆஜநேய குமார் அந்த இளைஞருக்கு அவர் விரும்பியவாறே நான்கு சமோசாக்களை சட்னியுடன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம் ஊரடங்கு சமயத்தில் அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக அவருக்கு தண்டனையாக சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தண்டனையும் அளித்துள்ளார்.

பின்னர் நீதிபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த இளைஞர் சாக்டையை சுத்தம் செய்யும் படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் அவர் யார் என்று தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT