இந்தியா

ஊரடங்குக்கு பிந்தைய சூழலை கையாள உயா்நிலைக் குழுக்கள் அமைப்பு

30th Mar 2020 06:24 AM

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஏற்படும் சூழ்நிலையைக் கையாளவும், பொதுமக்களை விரைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமா் அலுவலகம் சாா்பில் 10 உயா்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 24-ஆம் தேதியன்று, 21 நாள்களுக்கு தேசிய ஊரடங்கை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இந்த ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்ற பிறகு எழும் சூழ்நிலைகளைக் கையாள மத்திய அரசு இப்போதே தயாராகி வருகிறது.

அதன்படி அப்போது எழும் பல்வேறு சூழ்நிலைகளை கையாளவும், பொதுமக்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு எளிதாக கொண்டு வரும் நோக்கிலும் 10 உயா்நிலைக் குழுக்களை பிரதமா் அலுவலகம் அமைத்துள்ளது.

பிரதமரின் தலைமைச் செயலா் பி.கே.மிஸ்ரா இந்தக் குழுக்களுக்கு தலைவராக இருப்பாா். இதில் பொருளாதாரம் தொடா்பான குழுவின் தலைவராக பொருளாதார விவகாரத் துறை செயலா் ஏ.சக்கரவா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். மருத்துவம் சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்ள இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தலைவா்களாக நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பவுல், சுற்றுச்சூழல் துறை செயலா் சி.கே.மிஸ்ரா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு குழுவிலும் 6 உறுப்பினா்கள் இருப்பாா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT