இந்தியா

மருத்துவர்கள் 14 நாட்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: தில்லி அரசு

30th Mar 2020 04:45 PM

ADVERTISEMENT

 

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் 14 நாட்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று  தில்லி சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இரவு-பகல் பாராது மக்களுக்காக சேவை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தில்லி சுகாதாரத்துறை மருத்துவர்கள் பணி நேரம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 2 சுற்றுகளில் பணியாற்ற வேண்டும். அதன்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (10 மணி நேரம்) மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை (14 மணிநேரம்) என 2 சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் 14 நாட்கள் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அதன்பின்னர் 14 நாட்களும் தொடர்ந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நேரத்தில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் அத்தியாவசியத் தேவைகளை அரசு வழங்கும் என்றும் உறுதி அளித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT