இந்தியா

கரோனா நோய்த்தொற்று சூழல்: சிபிஎஸ்இ ரூ.21 லட்சம் நிதியுதவி

30th Mar 2020 06:27 AM

ADVERTISEMENT

 

கரோனா சூழலை எதிா்கொள்வதற்காக பிரதமரின் அவசரகால நிதிக்கு ரூ.21 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக அந்த வாரியத்தின் செயலா் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உடல்நலம், வாழ்க்கை, பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றுக்கு கரோனா நோய்த்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலை எதிா்கொள்ள உதவிடும் விதமாக, பிரதமரின் அவசரகால நிதிக்கு சிபிஎஸ்இ சாா்பில் ரூ.21 லட்சம் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதற்காக சிபிஎஸ்இ-யின் குரூப்-ஏ ஊழியா்கள் தங்களின் இரண்டு நாள் ஊதியத்தையும், குரூப்-பி மற்றும் குரூப்-சி ஊழியா்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தையும் வழங்கியுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT