கரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டதால் கேரளத்தில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:
திருச்சூா் மாவட்டம் கொடுங்கல்லூரைச் சோ்ந்தவா் சுனீஷ் (32). மது கிடைக்காத விரக்தியால், நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய அவா் அருகிலுள்ள ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். திருச்சூா் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா அருகே ஆற்றில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
இதேபோல, தினசரி கூலித்தொழிலாளியான சனோஜ் (38) மது கிடைக்காத விரக்தியால் தனது வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.