இந்தியா

கரோனா சிகிச்சைக்கு மலேரியாவுக்கான குளோரோகுயின்: மத்திய அரசு பரிந்துரை

23rd Mar 2020 03:33 PM

ADVERTISEMENT


கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோருக்கு மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தினை அளிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோருக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்- என்ற மருந்தை வழங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

கரோனா பாதிப்பு தொடர்பாக ஆராய்ச்சி செய்து பரிந்துரைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசரக் காலக் குழு ஆராய்ந்து பரிந்துரைத் தகவலை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை கரோனா சிகிச்சைக்கு அமெரிக்கா பரிந்துரைத்த நிலையில், இந்தியாவும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது.  இந்த மருந்து மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தாகும். இதனை மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT