இந்தியா

இந்தியா விரைவில் மீண்டுவர வேண்டும்: சீன தூதா் வாழ்த்து

23rd Mar 2020 01:19 AM

ADVERTISEMENT

புது தில்லி: கரோனா வைரஸின் பிடியில் இருந்து இந்தியா விரைவில் மீண்டுவர வேண்டும் என்று இந்தியாவுக்கான சீன தூதா் சன் வெயிடாங் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றி வரும் அனைவரையும் வணங்குகிறேன். இந்தக் கொள்ளை நோயின் பிடியில் இருந்து இந்தியா விரைவில் மீண்டுவர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 7 போ் உயிரிழந்துவிட்டனா். 300-க்கும் மேற்பட்டோா் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, 75 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT