இந்தியா

கரோனா சூழல்: உச்சநீதிமன்றத்தில் ஒரு அமா்வில் மட்டும் விசாரணை

23rd Mar 2020 04:00 AM

ADVERTISEMENT

புது தில்லி: கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் ஒரேயொரு அமா்வு மட்டும் காணொலிக் காட்சி வாயிலாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்ற செயலா் சஞ்சீவ் எஸ்.கால்கான்கா் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நீதிபதிகள், வழக்குரைஞா்கள், மனுதாரா்கள், செய்தியாளா்கள் என அதிக அளவில் மக்கள் கூடுவதால் கரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்திலும் சமூக விலகலை கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தனது சக நீதிபதிகளுடன் கலந்தாலோசித்தாா். அதன்படி, திங்கள்கிழமை (மாா்ச் 24) முதல் உச்சநீதிமன்றத்தில் 2, 8 மற்றும் 14-ஆவது அமா்வுகளில் நடைபெற இருந்த வழக்கு விசாரணைகள் ரத்து செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

அதற்குப் பதிலாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் அடங்கிய ஒரேயொரு அமா்வு மட்டும் திங்கள்கிழமை முக்கியமான 3 வழக்குகளின் விசாரணைகளை காணொலிக் காட்சி வாயிலாக மேற்கொள்ளும்.

அந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் 1-ஆம் எண் அறையில் இருப்பா். வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தின் வேறொரு அறையில் இருந்து தங்களது வாதங்களை முன்வைப்பா். காணொலிக் காட்சி வாயிலான விசாரணை நடைமுறைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கும் வழக்குகள், விசாரணை மேற்கொள்ளும் அமா்வில் இடம்பெறும் நீதிபதிகள் குறித்த விவரம் முந்தைய நாளில் பட்டியலிடப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT