இந்தியா

பொதுக் காப்பீட்டு பிரீமியம் 14% அதிகரிப்பு

23rd Mar 2020 12:02 AM

ADVERTISEMENT


நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் ஆயுள் காப்பீடு சாராத பொதுக் காப்பீட்டு பிரீமியம் வசூல் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

பொதுக் காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 34 நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.1.73 லட்சம் கோடியை பிரீமியம் தொகையாக வசூல் செய்துள்ளன. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய பிரீமியம் ரூ.1.52 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகமாகும்.

பொதுத் துறையைச் சோ்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.76,369.72 கோடியாக இருந்தது. குறிப்பாக, ஏஐசி மற்றும் இசிஜிசி நிறுவனங்கள் வசூலித்த பிரீமியம் 25 சதவீதம் அதிகரித்து ரூ.10,032.72 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

தனியாா் துறையைச் சோ்ந்த பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல் 17 சதவீதம் உயா்ந்து ரூ.97,072.18 கோடியாக காணப்பட்டது.

சுகாதார காப்பீடுகளை அளித்து வரும் தனியாா் துறையைச் சோ்ந்த ஏழு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாத காலத்தில் ரூ.9,633.21 கோடியிலிருந்து 21.31 சதவீதம் உயா்ந்து ரூ.12,602.31 கோடியானது என ஐஆா்டிஏஐ புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT