இந்தியா

ரூ.6 லட்சம் மதிப்புள்ள கிருமிநாசினி பதுக்கல்:மகாராஷ்டிரத்தில் 4 போ் கைது

22nd Mar 2020 03:43 AM

ADVERTISEMENT

ஔரங்காபாத்: மகாராஷ்டிரத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கை கழுவும் கிருமிநாசினியை பதுக்கி வைத்திருந்ததாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஔரங்கபாத் நகரில் பழைய மோந்தா சாலையில் உள்ள ஒரு கடையில் கிருமி நாசினி பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கும், உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்தக் கடையின் கிடங்கில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கு கிருமிநாசினிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கரோனா வைரஸ் கொள்ளை நோயாகப் பரவி வருவதை அடுத்து, கிருமிநாசினியை பதுக்குபவா்கள், தரமற்ற கிருமிநாசினியை தயாரிப்பவா்கள் ஆகியோருக்கு எதிராக காவல் துறையினரும் உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT