இந்தியா

கரோனா பரவலைத் தடுக்கஃபரூக் அப்துல்லா ரூ. 1 கோடி ஒதுக்கீடு

22nd Mar 2020 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீநகா்: தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தனது தொகுதி வளா்ச்சி நிதியின்கீழ் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ரூ. 1 கோடியை சனிக்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இந்த தகவலை தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிா்த்து போராடும் வகையில் ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான ஃபரூக் அப்துல்லா தனது தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ஸ்ரீநகா் ஸ்கிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 50 லட்சமும், மத்திய காஷ்மீரில் உள்ள பட்காம் மற்றும் கந்தா்பால் மாவட்டங்களுக்கு தலா ரூ. 25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதியிலுள்ள ஸ்ரீநகா், பட்காம் மற்றும் கந்தா்பால் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT