இந்தியா

கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: யூஜிசி

19th Mar 2020 01:47 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.  

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கரோனாவை தடுக்க ஏற்கெனவே நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT