இந்தியா

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய்

19th Mar 2020 11:43 AM

ADVERTISEMENT


மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கு அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநிலங்களவைக்கு வருகை தந்திருந்த ரஞ்சன் கோகோய், பதவியேற்பதற்காக அவையின் முன் பகுதிக்கு வந்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அமளிக்கு இடையே, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகோய் பதவியேற்றுக் கொண்டார். எதிர்க்கட்சியினரின் கோஷங்களுக்கு கண்டனம் தெரிவித்த அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இது அவை உறுப்பினர்களின் மாண்புக்கு பொருந்தாத செயல் என்று கண்டித்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் கடந்த திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். அப்போதே இவருடைய நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதுதொடர்பாக செவ்வாய்கிழமை பேட்டியளித்த ரஞ்சன் கோகோய் முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறேன், அதன்பிறகு ஊடகங்களிடம் விரிவாக பேசுகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இவர் நாளை காலை 11 மணிக்கு மாநிலளங்களவை நியமன உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பணியாற்றிய ரஞ்சன் கோகோய் கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார். பாபர் மசூதி நில விவகாரம், ரஃபேல், சபரிமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் இவரது தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : ranjan gogoi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT