இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு: மாநில சுகாதாரத் துறை

16th Mar 2020 10:03 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:

"மகாராஷ்டிரத்தில் யாவத்மல்லில் இருந்து ஒருவருக்கும், நேவி மும்பையில் இருந்து ஒருவருக்கும் என இரண்டு பேருக்கு இன்று கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட முதல் நபர் யாவத்மல்லைச் சேர்ந்த 51 வயது பெண். துபை சுற்றுலா குழுவில் இருந்து திரும்பிய புணேவைச் சேர்ந்த ஐடி ஊழியருக்கு ஏற்கெனவே கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இவருடைய தாய்-க்கு இன்று கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவரும் அந்த துபை சுற்றுலா குழுவில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட இரண்டாவது நபர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர் நேவி மும்பைக்கு வந்துள்ளார்".

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT