இந்தியா

ம.பி.யில் முகக் கவசம் தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள்

16th Mar 2020 01:40 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ஜபல்பூா் சரக சிறைகளுக்கான காவல்துறை துணை ஆய்வாளா் கோபால் தம்ராகா் கூறியதாவது:

மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை வேண்டுகோளின் பேரில், ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மத்திய சிறையில் உள்ள கைதிகள் முகக் கவசங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தம் 50 கைதிகள் 2,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அந்த முகக் கவசங்களை தயாரிப்பதற்கான நூல்களும் சிறை வளாகத்தில் உள்ள இயந்திரத் தறிகளால் நூற்கப்பட்டவையாகும். இந்த முகக் கவசங்கள் யாவும் மத்தியப் பிரதேச சுகாதாரத் துறையிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்படும். ஒரு முகக் கவசத்தின் விலை ரூ.7 ஆகும்.

ADVERTISEMENT

கைதிகளால் தயாரிக்கப்படும் முகக் கவசங்களை ஆய்வு செய்த தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி, அவை உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை பூா்த்தி செய்யும் வகையில் இருப்பதாகத் திருப்தி தெரிவித்தாா் என்று காவல்துறை அதிகாரி கோபால் தம்ராகா் கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT