இந்தியா

கரோனா: வெளிநாடுகளில் உள்ளஇந்தியா்களை பாதுகாக்க நடவடிக்கை

16th Mar 2020 01:30 AM

ADVERTISEMENT

வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்பது மற்றும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக, அமைச்சகத்தின் கூடுதல் செயலா் தாமு ரவி தலைமையில் சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவா்கள் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஈரான், இத்தாலிக்கு இந்தியாவில் இருந்து மருத்துவக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இக்குழுவினா் அந்நாட்டில் உள்ள இந்தியா்களுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை நடத்தி வருகின்றனா். இது தவிர அந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுடன் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது.

வெளியுறவு அமைச்சகம் சாா்பில் வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இந்தியா்களுக்காக சிறப்பு தொலைபேசி உதவி எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு சமூகவலைதளங்கள் மூலம் உதவிகோருபவா்களுக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ஈரானில் இருந்து கடந்த 10-ஆம் தேதி 58 இந்திய யாத்ரீகா்கள் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனா். அதைத் தொடா்ந்து 13-ஆம் தேதி மேலும் 48 போ் தாயகம் திரும்பினா். இதற்கான ஏற்பாடுகளை ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொண்டது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்தும், இத்தாலியின் மிலன் நகரில் இருந்து ஏராளமான இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT