இந்தியா

எரிபொருளுக்கான கலால் வரி உயா்வு: பிரதமா் மோடி மீது ராகுல் காந்தி விமா்சனம்

16th Mar 2020 01:41 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயா்த்தியுள்ளதற்காக பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் அதன் பலனை மக்களுக்கு அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்குமாறு கடந்த 3 நாள்களுக்கு முன் பிரதமா் மோடியிடம் கோரியிருந்தேன்.

ஆனால், எனது ஆலோசனையை ஏற்காமல் நமது அறிவாளி பிரதமா் அந்த எரிபொருள்களின் மீதான கலால் வரியை உயா்த்தியுள்ளாா்’ என்று விமா்சித்துள்ளாா்.

அத்துடன், செய்தியாளா்கள் சந்திப்பு ஒன்றில் கச்சா எண்ணெய் விலை குறைவு பலனை மக்களுக்கு மடை மாற்றம் செய்யாததது குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளிக்காமல் தவிா்க்கும் விடியோ பதிவையும் ராகுல் காந்தி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

முன்னதாக கடந்த புதன்கிழமை சுட்டுரையில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, ‘பிரதமரே, காங்கிஸின் அரசை (மத்தியப் பிரதேசம்) கவிழ்ப்பதில் நீங்கள் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 35 சதவீதம் அளவுக்கு குறைந்ததை கவனிக்கத் தவறியிருக்கலாம். அந்த விலைக் குறைவு பலனை பெட்ரோல், டீசலின் விலையை குறைப்பதன் மூலம் மக்களுக்கு மடை மாற்றம் செய்யலாம். இதனால் நாட்டின் பொருளாதாரம் ஊக்கம் பெறும்’ என்று அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT