இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி மாத பூஜைக்கு நடை திறப்பு

13th Mar 2020 09:12 PM

ADVERTISEMENT

 

பம்பை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக வெள்ளிக்கிழமை மாலை நடைதிறந்து வைக்கப்பட்டது.

மார்ச் 14 முதல் முதல் மார்ச்  18 வரை ஐந்து நாட்கள் பூஜை வழிபாடு நடைபெறும்.கணபதி ஹோமம் நெய்யபிஷேகம் நடைபெறும். படிபூஜை, உதயஸ்தமனபூஜை உட்பட முக்கிய பூஜைகள் கரோனோ  பரவலால் ரத்துசெய்யப்பட்டுள்ளது.  பக்தர்களும் சபரிமலை வருவதை தவிர்க்க திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஶ்ரீ ஐயப்பன் கோயிலில் நடையை  மாலை 5. மணிக்கு  தந்திரி கண்டரு மகேஷ் மோகனரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி  ஆலயமணியடித்து திறந்து வைத்து நெய் தீபமேற்றி வைக்க, ஐயப்பன்  தவகோலத்தில் காட்சி தந்தார். தொடர்ந்து மேல்சாந்தி 18 படி வழி இறங்கி தேங்காய் ஆழியில் தீபமேற்றி வைத்தார்.

ADVERTISEMENT

பின்னர் கொளுத்தும் வெயிலில் இருமுடியுடன் பலமணிநேரமாக காத்திருந்த பக்தர்கள் 18 படி ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு மேல்சாந்தி விபூதி பிரசாதம் வழங்கினார். மளிகைப்புறம் மஞ்சமாதா கோயில் நடையை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார்.

மார்ச் 14 முதல்  ஐந்து நாட்கள் கோயில் நடைதிறந்து  ஐயப்பனுக்கு கணபதிஹோமம் நெய்யபிஷேகம், உஜபூஜை, உச்சிபூஜை, மாலை தீபாராதனை  உட்பட பூஜைகள் நடைபெறும்.

கேரளாவில் பரவிவரும் கரோனா வைரஸ் நோய் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் அதிகம் அமுல்படுத்த ப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பிரதானமாக நடைபெறும்

உதயஸ்தமன பூஜை, படிபூஜை வழிபாடு சபரிமலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பம்பை சபரிமலையில் தங்கும் விடுதிகள் பக்தர்களுக்கு வழங்கப்படாது. முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது.அப்பம், அரவணை பிரசாதம் கவுண்டர் இயங்கவில்லை. பிரசாதங்களை தயாரிக்கவும் விற்பனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் வழக்கமான பணிகள் தவிர சிறப்பு பணியில் ஈடுபடமாட்டார்கள்.ஹோட்டல் இயங்கவில்லை. நிலக்கல் பம்பை சபரிமலையில் அன்னதானம் வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் பம்பை சபரிமலையில் செயல்படாது. அவசரப்பிரிவு மட்டும் இயங்கும். கேஎஸ்ஆர்டிசி பம்பைக்கு சிறப்பு பஸ்களை இயக்கவில்லை. இதனால் பக்தர்கள் சபரிமலை வருவதை தவிர்க்க தேவஸ்வ ம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. மீறி வருபவவர்கள் தேவையான வசதிகளை தங்கள் சொந்த பொறுப்பில் செய்துகொள்ள வேண்டும்.இது கரோனா வைரஸ்நோய் பரவலை தடுக்க திருவாங்கூர் தேவஸம்போர்டு கேரளா அரசு இணைந்து எடுத்த முடிவு என திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு  தலைவர் என்.வாசு சில நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். இதையும் தெரியாமல் வெள்ளிக்கிழமை சபரிமலையில் வெளிமாநில பக்தர்கள் நூற்றுக்கணக்கில் இருமுடி கட்டி வந்திருந்தனர். இவர்கள் உணவு மற்றும் இதரவசதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பக்தர்கள் பம்பையில் இருந்து தீவிரமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பே மலையேற  அனுப்பி வைத்தனர்.

கேரளாவில் கரோனா வைரஸ்நோய் அறிகுறிகள் மேலும் இருவருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்ததையடுத்து பத்தனம்திட்டா மாவட்ட சுகாதாரத்துறை சபரிமலை வரும் பக்தர்களை தீவிரமாக கண்காணிப்பு செய்து வருகிறது.

மார்ச் 14இல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு  18- ஆம் தேதி வரை 5 நாட்கள் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் 4.15க்கு கணபதி ஹோமம், 4.15 முதல் நெய் அபிஷேகம் துவங்கி காலை 7மணிவரை நடைபெறும். காலை 7.30க்கு உஷ பூஜை நடைபெறும். தொடர்ந்து நடைபெறும் உதயஸ்தமனபூஜை ரத்து செய்யப்பட்டுள்ளது.காலை 8.30முதல் 11.30வரை நெய்யபிஷேகம் தொடர்ந்து அஷ்டாபிஷேகம் நடைபெறும்.பகல் 12.30க்கு  உச்ச பூஜை தீபாராதனை நடத்தி நடை அடைக்கப்படும்.

மாலை 5 மணிக்கு நடைதிறந்து 6.30க்கு தீபாராதனை  இரவு 9.30க்கு  அத்தாழ பூஜை நடைபெறும்.  படிபூஜை உள்பட பல்வேறு முக்கிய பூஜைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.இரவு 10.30க்கு ஹரிவராஸனம் பாடி நடை அடைக்கப்படும்.

இதேபோல்  மளிகைப்புறம் மஞ்சமாதா கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரரு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில்   நடைபெறும். பின்னர் 18-ந் தேதி இரவு 9.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்களுக்கு தேவையான சுகாதார மருத்துவ  வசதிகள், அன்னதானம் அத்தியாவசிய தேவைகள் சிறப்பு பேருந்து அனைத்தும் கரோனா நோய் பரவலால்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT