இந்தியா

மாநில வாரியாக கரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல்

13th Mar 2020 12:59 PM

ADVERTISEMENT

 

வெள்ளிக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று தொடர்பான பட்டியலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை வெளிநாட்டினர் 17 பேர் உள்பட மொத்தம் 75 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் சிகிச்சைப் பெற்று உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர். மேலும் பெங்களூருவில் ஒரு முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், கேரளாவில் அதிகபட்சமாக 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோன்று ஹரியாணாவில் அதிகபட்சமாக 14 வெளிநாட்டினருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை விமான நிலையங்களில் மட்டும் 11,14,025 பயணிகளுக்கு கரோனா நோய் தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம் பின்வருமாறு:

ADVERTISEMENT
ADVERTISEMENT