இந்தியா

கரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? உலக சுகாதார அமைப்பின் அறிவுரை

13th Mar 2020 02:16 PM

ADVERTISEMENT

 

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் காலடி எடுத்து வைத்துவிட்டது.

தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு கரோனா வைரஸ் பரவி, அவரும் தற்போது குணமடைந்துவிட்டார். எனினும், அங்கொன்றும் இங்கொன்றுமாக கரோனா அறிகுறியுடன் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் கரோனா பரவி விடுமா? நாமும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமா? என்று அச்சத்தோடு இருப்பவர்களுக்காக உலக சுகாதார அமைப்பு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த 7 முக்கிய விஷயங்கள்..

  • கைகளை சோப்புப் போட்டு அவ்வப்போது கழுவுங்கள். 
  • வெளியிடங்களுக்குச் செல்லும் போது உங்கள் கண், வாய், மூக்கில் கை வைப்பதைத் தவிருங்கள்.
  • இருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டையைக் கொண்டு வாய் மற்றும் மூக்கை மறையுங்கள்.
  • முக்கியமாக கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.
  • சளி தொந்தரவு இருந்தால் வெளியில் செல்லாமல் தனிமையில் இருங்கள்.
  • சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு முன்பு மாவட்ட சுகாதார அமைப்பு வெளியிட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்.
  • முக்கியமாக, உலக சுகாதார அமைப்பு வெளியிடும் விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  •  
Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT