இந்தியா

ரியாத்தில் இருந்து திரும்பிய இரு பயணிகளிடம் ஆயிரம் கிராம் தங்கம் பறிமுதல்

13th Mar 2020 09:25 AM

ADVERTISEMENT

 

ரியாத்தில் இருந்து திரும்பிய இரு பயணிகளிடம் இருந்து தில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் ஆயிரம் கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ரியாத்தில் இருந்து தில்லிக்கு வியாழக்கிழமை வந்தடைந்த 6இ-1838 விமானத்தில் இருந்து வெளியேறிய இரு இந்தியப் பயணிகளை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் இருந்து சுமார் ரூ.44 லட்சம் மதிப்புடைய 1050 கிராம் எடையுள்ள 9 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தில்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT