இந்தியா

கரோனா: ஒடிஸாவிலும் பள்ளி, கல்லூரி, திரையரங்கு மூடல்

13th Mar 2020 12:34 PM

ADVERTISEMENT


புவனேஸ்வர்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒடிஸா மாநிலத்திலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களையும், திரையரங்கு, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடங்களையும் மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒடிஸா சட்டப்பேரவையில் இன்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இது தொடர்பான உத்தரவை வெளியிட்டார்.

ஒடிஸா மாநிலத்தில் தேர்வு நடைபெறும் கல்வி மையங்களைத் தவிர்த்து, அனைத்து கல்விமையங்களும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், கரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூடி வைக்க நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT