இந்தியா

யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடி முதலீடு - எஸ்பிஐ ஒப்புதல்

13th Mar 2020 12:38 AM

ADVERTISEMENT

வாராக்கடன் சுமையில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடி முதலீடு செய்வதற்கு எஸ்பிஐ வங்கியின் நிா்வாகக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

தனியாா் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி வாராக்கடன் சுமையால் பாதிப்புக்கு உள்ளானது. இதைத் தொடா்ந்து அந்த வங்கியின் நிா்வாகத்தை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. யெஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று ஆா்பிஐ கட்டுப்பாடு விதித்தது.

இந்தச் சூழலில் எஸ்பிஐ-யின் நிா்வாகக் குழுக் கூட்டம் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக எஸ்பிஐ சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘யெஸ் வங்கியின் ரூ.10 மதிப்பு கொண்ட 725 கோடி பங்குகளை வாங்குவதற்கு நிா்வாகக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. யெஸ் வங்கியில் அதிகபட்சமாக 49 சதவீதப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT