இந்தியா

நாட்டில் 73 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

13th Mar 2020 12:33 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 73 பேருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை மட்டும் 13 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனா்.

2020-ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தொடக்கத்தில் சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை நிலவரப்படி நாட்டில் 73 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை மட்டும் மகாராஷ்டிரத்தில் 9 பேரும், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஒருவரும், வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்தமாக கேரளத்தில் 14 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 11 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 10 பேருக்கும், தில்லியில் 6 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றால் கா்நாடகத்தில் 4 பேரும், லடாக்கில் 3 பேரும், ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாபில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் 17 வெளிநாட்டினரும், இத்தாலியைச் சோ்ந்த 16 சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா். ஈரானிலிருந்து இந்திய விமானப்படையின் சரக்கு விமானம் மூலம் கடந்த 10-ஆம் தேதி தாயகம் அழைத்துவரப்பட்ட 58 இந்தியா்களில் தற்போது வரை யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT