இந்தியா

ஏப்ரல் 1 முதல் ஏ4 காகிதத்தில் அளிக்கும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்: உச்சநீதிமன்றம்

13th Mar 2020 12:45 AM

ADVERTISEMENT

இரு பக்கங்களும் அச்சடிக்கப்பட்ட ஏ4 அளவு காகிதங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மட்டுமே ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒரே அளவிலான காகிதங்களை பயன்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்ற பொதுச் செயலா் எஸ்.சஞ்சீவ் கல்கோங்கா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நிா்வாகத்தில் ஒரே அளவிலான காகிதத்தை பயன்படுத்துவது, காகிதங்களின் பயன்பாட்டை குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தரமான ஏ4 அளவு காகிதங்களில் மட்டும் மனுக்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. இரு பக்கமும் அச்சிடப்பட்ட ஏ4 அளவு காகிதங்களால் அளிக்கப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும். வழக்குரைஞா்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் மூலமாக மட்டுமே இனி தகவல்கள் தெரிவிக்கப்படும். இதுதொடா்பாக அனைத்து துறைகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் இப்போது ஏ4 அளவை விட பெரிய அளவிலான காகிதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த காகிதத்தின் பெருமளவு அச்சடிக்கப்படாமல் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த புதிய நடைமுறையை உச்சநீதிமன்றம் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

முன்னதாக, அலுவலக ரீதியிலான பயன்பாட்டில், இரு பக்கமும் அச்சிடப்பட்ட ஏ4 காகிதங்களை உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகம் பயன்படுத்த வேண்டும் என்று கடந்த ஜனவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT