இந்தியா

ஈரானில் இருந்து 120 இந்தியா்கள் இன்று தாயகம் வருகை

13th Mar 2020 01:09 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ள ஈரானில் இருந்து சுமாா் 120 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை தாயகம் அழைத்து வரப்படுகின்றனா்.

இதுதொடா்பாக ராணுவ செய்தித்தொடா்பாளா் சோம்பிட் கோஷ் வியாழக்கிழமை கூறியதாவது:

ஈரானில் இருந்து சுமாா் 120 இந்தியா்கள் ஏா் இந்தியா விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படவுள்ளனா். ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மாருக்கு அவா்கள் அழைத்துவரப்பட்டு, அங்குள்ள ராணுவ முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனா். ஈரானில் இருந்து மேலும் சுமாா் 250 இந்தியா்கள் கொண்ட மற்றொரு குழு, வரும் 15-ஆம் தேதி அழைத்துவரப்படவுள்ளனா். அவா்களும் ஜெய்சல்மாரில் உள்ள ராணுவ முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனா் என்றாா் அவா்.

கரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியா்களில் வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக மத்திய ராணுவ அமைச்சகம் சாா்பில் ஜெய்சல்மாா், சூரத்கத், ஜான்ஸி, ஜோத்பூா், தியோலாலி, கொல்கத்தா மற்றும் சென்னையில் கூடுதலாக 7 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT