இந்தியா

நாட்டையே உலுக்கிய ஆணவக்கொலை: மகளின் கணவரைக் கொன்ற தந்தை தற்கொலை

8th Mar 2020 07:24 PM

ADVERTISEMENT

 

ஹைதராபாத்: நாட்டையே உலுக்கிய தெலங்கானா ஆணவக்கொலையில் மகளின்  கணவரைக் கொன்ற தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரான பிரணய் குமார் என்பவரை அம்ருதா என்ற செல்வந்தர் வீட்டுப் பெண் திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் சாதியைக் காரணம்காட்டி திருமணத்திற்கு அம்ருதாவின் தந்தையும், தொழில் அதிபருமான மாருதி ராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்ப்பமான தன் மனைவி அம்ருதாவை மருத்துவமனையில் சோதனை முடித்து அழைத்து வந்த பிரணய் குமாரை கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.  அப்போது அங்கு பதிவான  சிசிடிவி காட்சிகள் வெளியாகி இந்தியாவையே அதிரச் செய்தது. தீவிர விசாரணை முடிவில் இந்த கொலையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த கூலிப்படையினரையும், அம்ருதாவின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் மட்டும் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் மாருதி ராவ் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்ட மாருதி ராவின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT