இந்தியா

கேரளத்தில் சிபிஎம் சட்டப்பேரவை உறுப்பினர் காலமானார்

8th Mar 2020 10:30 AM

ADVERTISEMENT

கேரளத்தில் சிபிஎம் சட்டப்பேரவை உறுப்பினர் என் விஜயன் பிள்ளை இன்று காலமானார். 

கேரளத்தின் சவரா தொகுதியைச் சேர்ந்த சிபிஐ (எம்) எம்எல்ஏ என் விஜயன் பிள்ளை. இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக  கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை காலமானார். 

என் விஜயன் பிள்ளை, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நாராயணன் பிள்ளையின் மகன் ஆவர். 1979 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 2016 ஆம் ஆண்டில் சவரா தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

என் விஜயனின் மறைவு சிபிஎம் கட்சித் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ADVERTISEMENT

Tags : CPM MLA N Vijayan Pillai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT