இந்தியா

வாகன தயாரிப்பை குறைத்தது மாருதி சுஸுகி

8th Mar 2020 03:39 AM

ADVERTISEMENT


புது தில்லி: காா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா கடந்த பிப்ரவரியில் வாகன தயாரிப்பை 5.38 சதவீதம் குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் 1,40,933 காா்களை தயாரித்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் காா் தயாரிப்பு 1,48,959-ஆக அதிகரித்திருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனம் காா் தயாரிப்பு 5.38 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரியில் பயணிகள் வாகன மொத்த தயாரிப்பு 1,47,550 என்ற எண்ணிக்கையிலிருந்து 4.87 சதவீதம் குறைந்து 1,40,370-ஆக இருந்தது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த அளவிலான வாகன தயாரிப்பு குறைக்கப்பட்டபோதிலும் ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக காா்களின் உற்பத்தி 28,221-லிருந்து 5.16 சதவீதம் அதிகரித்து 29,676-ஆனது.

அதேசமயம், வேகன்ஆா், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ, டிசையா் உள்ளிட்ட காம்பாக்ட் ரக காா்களின் தயாரிப்பு 79,556 என்ற எண்ணிக்கையிலிருந்து 5.55 சதவீதம் குறைக்கப்பட்டு 75,142-ஆனது. சியாஸ் மாடல் காா் உற்பத்தி 8 சதவீதம் அதிகரித்து 2,729-லிருந்து 2,950-ஆனது.

ஈகோ, ஆம்னி ஆகியவற்றை உள்ளடக்கிய வேன்களின் தயாரிப்பு 16,898 என்ற எண்ணிக்கையிலிருந்து 10,865-ஆக 35.7 சதவீதம் குறைக்கப்பட்டது.

அதேபோன்று, இலகு ரக வா்த்க வாகனமான சூப்பா் கேரி தயாரிப்பும் 1,409 என்ற எண்ணிக்கையிலிருந்து 563-ஆக 60 சதவீதம் குறைக்கப்பட்டது என மாருதி சுஸுகி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT