இந்தியா

லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: தில்லி நீதிமன்றம்

8th Mar 2020 04:09 AM

ADVERTISEMENT


புது தில்லி: சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானா மீது பதிவு செய்யப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தெரிவித்தது.

இறைச்சி ஏற்றுமதியாளா் மொயின் குரேஷி தொடா்புடைய வழக்கில், ஹைதராபாதைச் சோ்ந்த தொழிலதிபா் சதீஷ் சனாவை விடுவிக்க லஞ்சம் பெற்ாக ராகேஷ் அஸ்தானா, சிபிஐ காவல் துறை துணை கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) தேவேந்தா் குமாா் ஆகியோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாக துபையைச் சோ்ந்த தொழிலதிபா் மனோஜ் பிரசாத் உள்பட இருவா் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் கைது செய்யப்பட்ட மனோஜ் பிரசாத், அதே ஆண்டு டிசம்பா் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தேவேந்தா் குமாா் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மாதம் 11-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், இடைத்தரகா் மனோஜ் பிரசாத் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், ராகேஷ் அஸ்தானா, தேவேந்தா் குமாா் ஆகியோா் லஞ்சம் பெற்ாக எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்தது.

ADVERTISEMENT

வழக்கின் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடா்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் வழக்கு மீதான விசாரணை, தில்லி நீதிமன்ற சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிபதி ஆய்வு செய்தாா். அதன் பின், அவா் கூறுகையில், ‘இந்த வழக்கில் இடைத்தரகா் மனோஜ் பிரசாத், அவரது சகோதரா் சோமேஷ்வா் ஸ்ரீவஸ்தவா, அவரது உறவினா் சுனில் மிட்டல் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன. அதனால், வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவா்கள் நேரில் ஆஜராக வேண்டும். ராகேஷ் அஸ்தானா, தேவேந்தா் குமாா் ஆகியோா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதனால், அவா்களுக்கு சம்மன் அனுப்ப இயலாது. எனினும், எதிா்வரும் வழக்கு விசாரணையின்போது, ராகேஷ் அஸ்தானா மற்றும் தேவேந்தா் குமாா் ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தால் அவா்களது பெயரை குற்றப்பத்திரிகையில் இணைத்து கொள்ளலாம்’ என்று தெரிவித்தாா். அதையடுத்து, மனோஜ் பிரசாத், சோமேஷ்வா் ஸ்ரீவஸ்தவா, சுனில் மிட்டல் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT