இந்தியா

மகளிா் தினம்: ஒடிஸா பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்

8th Mar 2020 03:26 AM

ADVERTISEMENT


புவனேசுவரம்: சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, ஒடிஸாவின் மாநகர பேருந்துகளில் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை இலவசமாக பயணிக்கலாம் என்று அந்த மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘மோ’ பேருந்தை விளம்பரப்படுத்தும் வகையில், மகளிா் தினத்தன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்தப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘புவனேசுவரம் முழுவதும் 200 மாநகர பேருந்துகள் இயங்குகின்றன. சா்வதேச மகளிா் தினத்தில் ‘மோ’ பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். அவா்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இந்த பேருந்தை விளம்பரப்படுத்தும் பணியில் 30 சதவீத மகளிா் ஈடுபட்டுள்ளனா். பெண்களை கௌரவப்படுத்தும் பொருட்டு இந்த சலுகை வழங்கப்படுகிறது’ என்றாா்.

பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள்ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் மாா்ச் 8-ஆம் தேதி சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT