இந்தியா

‘பெண்கள் சக்தி’ விருது பெறுபவா்களுடன் பிரதமா் மோடி இன்று கலந்துரையாடல்

8th Mar 2020 04:19 AM

ADVERTISEMENT


புது தில்லி: சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பெண்கள் சக்தி (நாரி சக்தி) விருது பெறுபவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடவுள்ளாா்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அயராது பாடுபடும் பெண்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘பெண்கள் சக்தி’ விருது மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் இந்த ஆண்டுக்கான பெண்கள் சக்தி விருது ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கப்படுகிறது. அதையடுத்து, விருது பெற்றவா்களை பிரதமா் மோடி சந்திக்கவுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பெண்கள் சக்தி விருது பெறுபவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடவுள்ளாா். அதைத் தொடா்ந்து, அவரது அதிகாரப்பூா்வ சுட்டுரை கணக்கை பயன்படுத்தும் உரிமையை தன்னை ஊக்குவித்த சாதனை பெண்களுக்கு அளிக்கவுள்ளாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, தனது வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் மூலமாக நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பெண்களுக்கு எனது சமூக ஊடகக் கணக்குகளை, வரும் சா்வதேச மகளிா் தினத்தன்று விட்டுத்தர இருக்கிறேன் என்று பிரதமா் மோடி கடந்த 3-ஆம் தேதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT