இந்தியா

பிரதமா் மோடி ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை

8th Mar 2020 04:52 AM

ADVERTISEMENT


புணே: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 6 ஆண்டு ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பெருமிதம் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தின் புணேயில் உள்ள கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் மருந்தகம் தின’ நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜாவடேகா் பங்கேற்றாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்கும் முன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. குண்டுவெடிப்பு காரணமாக புணே, வதோதரா, ஆமதாபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தன. 10 நாள்களுக்கு ஒருமுறை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்வதும், மக்கள் பலியாவதும் வழக்கமாக இருந்தது.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரதமா் மோடி மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாகவே இது சாத்தியமானது.

ADVERTISEMENT

சுகாதாரம் தொடா்பாகப் பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழை மக்கள் அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தை தாரக மந்திரமாகக் கொண்டு பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

ஏழை மக்களைக் கருத்தில்கொண்டு மலிவுவிலை மக்கள் மருந்தகங்களை அமைத்தது, ‘ஆயுஷ்மான் பாரத்’ (சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்) திட்டத்தைச் செயல்படுத்தியது, யோகாவை ஊக்குவித்தது, ஆரோக்கியமான இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கத்தை ஊக்குவித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

நாட்டில் 6,000-க்கும் அதிகமான மலிவுவிலை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் நாள்தோறும் 2 முதல் 3 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனா். அங்கு மருந்துகள் மலிவான விலைக்குக் கிடைப்பதால், அந்த மருந்தகங்கள் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். திறந்தவெளிக் கழிப்பு இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு வீடுதோறும் கழிப்பறை கட்டுவதை மத்திய அரசு ஊக்குவித்தது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. அமைப்பு பாராட்டு தெரிவித்தது என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT