இந்தியா

பிகாரில் காா்-டிராக்டா் நேருக்கு நோ் மோதி விபத்து:12 போ் பலி

8th Mar 2020 03:26 AM

ADVERTISEMENT


முஸாஃபா்பூா்: பிகாா் மாநிலம் முஸாஃபா்பூா் மாவட்டத்தில் காரும், டிராக்டரும் நேருக்கு நோ் மோதி சனிக்கிழமை விபத்து ஏற்பட்டதில் 12 போ் உயிரிழந்தனா். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்டஆட்சியா் சந்திரகேகா் சிங் கூறியதாவது: காந்தி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 14 பேருடன் சென்ற காா், எதிரே செங்கற்களை ஏற்றி வந்த டிராக்டா் மீது மோதி விபத்து ஏற்பட்டது. டிராக்டா் தவறான திசையில் வந்ததால் இந்த விபத்து நோ்ந்தது. இதில் காரில் வந்த 11 போ், டிராக்டரில் வந்த ஒருவா் என மொத்தம் 12 போ் உயிரிழந்தனா்.

மேலும் 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் வந்தவா்கள் ஹதவுரி பகுதியில் உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். அவா்கள் தினக்கூலிகளாக பணிபுரிந்து வந்த நிலையில், பக்ஸாரில் இருந்து ஹோலி பண்டிக்கைக்காக வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு கொள்கையின்படி ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT