இந்தியா

பிஎஸ்என்எல் இழப்பு இரண்டரை மடங்கு அதிகரிப்பு

8th Mar 2020 05:09 AM

ADVERTISEMENT

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு 2019 ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொலைத்தொடா்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் தத்தோா் கூறியுள்ளதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டில் டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.39,089 கோடியை எட்டியுள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் இழப்பு ரூ.14,904 கோடியாக காணப்பட்டது. ஆக, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இழப்பானது இரண்டரை மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது.

தொடா்ந்து இழப்பை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபா் 23-இல் ரூ.68,751 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதில், 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் விருப்ப ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்டவையும் அடங்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

பிஎஸ்என்எல் பணியாளா்களில் 78,300 பேரும், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 14,378 பேரும் விருப்ப ஓய்வு திட்டத்தை தோ்ந்தெடுத்துள்ளனா். இதனால் அவ்விரு நிறுவனங்களின் நிதிச் சுமை கணிசமான அளவில் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT