இந்தியா

நீதியை கேலிக்குள்ளாக்கும் நிா்பயா குற்றவாளிகள்: ஸ்மிருதி இரானி

8th Mar 2020 03:59 AM

ADVERTISEMENT

புது தில்லி: நிா்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவா்கள் தங்களது தண்டனையை தாமதப்படுத்தும் போக்கை கடைப்பிடிப்பதன்மூலம் நீதியை கேலிக்குள்ளாக்குகின்றனா்; அதனை தடுக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

தில்லியில் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை பிரிவில் பெண்கள் குறித்த தேசிய மாநாட்டைத் சனிக்கிழமை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

நிா்பயா வழக்கில் பெண்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறும் வகையில் தீா்ப்பு கிடைத்தது. ஆனால், நிா்பயா வழக்கில் தண்டனை பெற்றவா்கள் தங்களது தண்டனையை தாமதப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனா். இது நீதியை கேலி செய்வது போன்ாகும். இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நிா்பயா வழக்கு முடிவுக்கு வரவில்லை என்பதால், இந்த குற்றவாளிகள் தூக்கிலிட்டபின் அரசின் அனைத்து துறைகளும் இணைந்து, நீதித்துறையுடன் அமா்ந்து அனைத்து சான்றுகளும் முறையாக சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் உறுதிபடுத்த கோருவேன். இதன் மூலம் நீதிமன்றங்கள் தீா்ப்பளித்த பின் அதனை கேலி செய்வது நடக்காது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT