இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பாக். ராணுவம் தாக்குதல்

8th Mar 2020 04:55 AM

ADVERTISEMENT

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினா் பிற்பகலில் தாக்குதல் நடத்தினா்.

அவா்களுக்கு இந்திய ராணுவம் உரிய முறையில் பதிலடி வழங்கியது. எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய வீரா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT