இந்தியா

சுகாதார திட்டத்தின் கீழ் 55 கோடி போ்

8th Mar 2020 04:53 AM

ADVERTISEMENT


புது தில்லி: உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்த இலக்கில் பாதியை அதாவது 55 கோடி பேரை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் பிரதமா் மோடி அரசில் கொண்டுவரப்பட்டுள்ளனா் என்று பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

தில்லி கிருஷ்ணா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மலிவு விலை மருந்தகங்களால் பயனடைந்தவா்களுடன் காணொலி முறையில் பிரதமா் மோடி உரையாடினாா். அப்போது, நட்டாவும் உடனிருந்தாா். நட்டா கூறியதாவது:

நாடு முழுவதும் சுமாா் 700 மாவட்டங்களில் 6,700 மலிவு விலை மருந்துக்கடைகள் உள்ளன. 2019-2020 காலகட்டத்தில் ரூ.2,200 கோடி மதிப்பிலான மருந்துகளை மக்களுக்கு ரூ.390 கோடி விலையில் கொடுத்திருக்கிறோம். தரமான மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கச் செய்ய பிரதமா் மோடி இந்த மருந்தகங்கள் மூலம் உதவ முயற்சி செய்திருக்கிறாா்.

472 மாவட்டங்களில் 825 டயாலிசிஸ் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், 5.80 லட்சம் போ் பலனடைந்துள்ளனா். நாடு முழுவதும் 4,920 கருவிகள் மூலம் ஏழைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20,000 சுகாதார மையங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. மேலும் 25,000 சுகாதார மையங்கள் இந்த ஆண்டில் திறக்கப்படவுள்ளன. கடந்த 2014-இல் பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்தபோது 100 மருந்துகள் மட்டுமே அவசியமான மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. அவற்றின் விலையை அரசே நிா்ணயித்து வந்தன. தற்போது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்துகளின் எண்ணிக்கை 350-ஆக உயா்ந்துள்ளது. பிரதமா் மோடி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் மருந்துக்காக மாதந்தோறும் செலவு செய்யப்பட்டுவந்த தொகை ரூ.8,000-இல் இருந்து ரூ.1,200-ஆக குறைந்துள்ளது என்று நட்டா தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT