இந்தியா

கரோனா முன்னெச்சரிக்கை : நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அளித்த புதிய அறிவுறுத்தல்!

6th Mar 2020 04:55 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக் குழு (யுஜிசி) சில புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சீனாவில் துவங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கரோனா வைரஸின் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக, மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வியாழனன்று அறிவிப்பினை வெளியிட்டார்.

ADVERTISEMENT

அதேபோல் பாதிப்பிற்கான முதன்மை அறிகுறிகள் உள்ள குழநதைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும்,  உடனடியாக மருத்துவமனைகளில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக் குழு (யுஜிசி) சில புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அளித்துள்ள வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து, கரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பணி நிமித்தம் சென்று வந்த பல்கலை அலுவலர்கள் மற்றும் கல்வித் திட்டத்தின் படி சென்று வந்த மாணவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு கரோனா  நோய்த்தொற்று உள்ளதா என்பது குறித்த சோதனைகளை மேகொள்ளுமாறும், இதனை அவசர நடவடிக்கையாக கருதி செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT